இந்தப் புத்தகத்தில் நான் சேகரித்துக் கொடுத்திருக்கும் நாட்டார் கதைகள், இன்றும் கூட மிசோ மக்களிடம் மிகவும் ரசனையோடு வாய்மொழியாகப் பயின்று வருபவை. நான் வார்த்தைக்கு வார்த்தை பொருள் தரக்கூடிய மொழிபெயர்ப்பினையே இந்நூலில் கொடுத்திருந்தாலும்கூட மிசோ நாட்டார் இலக்கியத்தினைப் பயிலவும் ஆய்வு செய்யவும் விரும்பும் அறிஞர்களுக்கு ஓர் அறிமுகமாக இந்நூல் உதவும் என்று நான் நம்புகிறேன். நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், சில முற்காலக் கவிதைகள், சில தற்காலக் கவிதைகள் ஆகியவற்றை மட்டுமே இந்நூலில் தொகுத்தளித்துள்ளேன். மிசோ சிறுகதைகள், நாவல்கள், குறுநாடகங்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவை இந்நூலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இம்முயற்சியைத் தொடர்ந்து மேற்கோள்வோமானால், அடுத்து வெளிவரும் தொகுப்பில் மிசோ எழுத்தாளர்களின் இன்றியமையாத படைப்புகள் பலவற்றை இணைத்து வெளியிடலாம் என்பது எனது நம்பிக்கை.
- லால்த்லுவாங் லியானாகி கியாங்கேயன் (முன்னுரையில்)
Be the first to rate this book.