இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இறைவன், மனிதன் என்பதெல்லாம் எப்படி ஆண்களாக மனதில் உருவகங்களை உருவாக்கியதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அதுபோல் கவிதை என்றாலே அது பெண்களுக்கானவை என்று முடிவாகிவிடுகிறது. பெண்களுக்காக எத்தனை எத்தனை கவிதை படைப்புகளை உருவாக்கினாலும் அது அத்தனைக்கும் அழகான பெயர் கிடைத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பெண்களும் கவிதைகளும் வெவ்வேறாகச் சித்தரிப்பது கடினம். சாரலின் சிதறலில் ஒரு க்யூட்டி தேவதை, கஸாட்டா கண்மணி, ரௌத்திர ராசாத்தி, அழகான கொலைகாரி, என் இனிய திமிரழகே போன்ற தலைப்புகள் இதற்கான உதாரணங்கள். ‘கண் சிமிட்டலுக்கு அடுத்தது என்ன?’ என்று நண்பர்கள் வினவியபோது, தன் காதலனுக்காகக் கண்ணம்மா எழுதும் ஒரு கவிதை தொகுப்பை அடுத்த புத்தகத்தின் யோசனையாகத் தெரிவித்தேன்.
Be the first to rate this book.