நாவல் இலக்கியம் என்பது வெறும் கதைச் சொல்லாடலை மையப்படுத்தியதல்ல. நாவலை கதைப் புத்தகம் என்று அழைக்கின்ற இந்த மரபை விட்டுச் சற்று ஒதுங்கி நிற்கிறது ஒரு சிறந்த நாவல். கதை சொல்லல் வெறும் பாதை மட்டுந்தான். பாதை எப்போதுமே பயணப்படுவதில்லை. அது பயணத்துக்கான ஒரு துணை மட்டுமே. பயணம் மனிதர்களுக்கானது. இதுபோல கதை பாதை மட்டுமே. பயணம் உயிருள்ள பாத்திரங்களுக்கானவை. கவிதை தெறித்துக் கிடக்கின்ற உரைநடை, கவிதைகள் நிரம்பிய கதை, கவிதைத் தன்மையான பாத்திரங்கள். இந்நாவலின் கதைக்களம் புதிது! இந்தத் தமிழ் புதிது!
Be the first to rate this book.