முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை... குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது.
வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெற்றுச் சலனங்கள்... இவையே நினைவில் கவிதையாகப் பதிந்து கிளைத்து அசைகின்றன.
நானே அறியாத கணத்தில் என்னிடம் வரும் கவிதை சில சமயம் என் வசப்படுகிறது. சில சமயம் அது நழுவி, நகர்ந்து தென்படாத நிறக்குமிழ்களாகி விடுகிறது. மாயக் குமிழ்களின் பின் அலைபவளாக இருப்பது அலுக்கவேயில்லை.
- உமா மகேஸ்வரி
Be the first to rate this book.