மரணம் எல்லோருக்கும் பொதுவானது. திடீரென எதிர்கொள்ளும்போது அது மரணித்தவர்களுக்கு ஓர் அமைதியையும், இன்னும் இருப்பவர்களுக்கு ஒரு மூர்க்கத்தனமான வலியையும் கொடுக்கவல்லது !அது தோற்றுவிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், காலங்களைக் கடந்த மிக நுட்பமான வாழ்க்கை பிம்பங்களும் ஆழ்மனதில் வலியைக் கொடுப்பவை!
ஒரு பனிப்பிரதேசத்தில் தனியாய்க் கணவன் ஜூல்ஸுடன் வசிக்கும் ஆலிஸ், பனி மிகுந்த ஒரு நாள் காலை, காபியின் மணத்துடன் எழுந்து கொள்கிறாள் – ஜூல்ஸ் வழக்கம்போல் காலைச் சிற்றுண்டியையும், காபியையும் தயார் செய்வதன் மணம்தான் அது. படுக்கையறையிலிருந்து வந்து, ஹாலில் சோபாவில் அன்றைய தினசரியுடன் அமர்ந்திருக்கும் கணவன் அருகில் அமர்கிறாள் ஆலிஸ். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவரைக் கூப்பிடுகிறாள் – தோளில் கைவைத்த போதுதான் தெரிகிறது ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார் என்று !
Be the first to rate this book.