சினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறித்து இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமியுடனான சுஜாதாவின் கலந்துரையாடல்; விமான நிலையத்தில் வேலை பார்த்த அதிர்ச்சி அனுபவங்கள்; அவர் விமானமும் சைக்கிளும் ஓட்டக் கற்றுக்கொண்ட ஹாஸ்ய சம்பவங்கள்; இரண்டாயிரம் மைல்கள் தமிழ்நாட்டைச் சுற்றிவந்து எழுதிய பயணக் குறிப்புகள்; ஜெயகாந்தன், வண்ண நிலவன், சிவசங்கரி போன்றோருடைய சிறுகதைகள் மீதான விமரிசனம்; அவர் மனம் கவர்ந்த கவிதைகள்; இன்னும் இன்னும்.
Be the first to rate this book.