தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம்.
'மின்சாரப்பூ' ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். 'அன்பெழுத்து' வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது.
'நீரில்லாமீன்' கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.
Be the first to rate this book.