க.சரவணன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரையில் பள்ளித்தலைமையாசியராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவல்கள் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். பல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 'அகிலாவும் பிரேசில் பெண்களும்' என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் 'சிவப்புக்கோள் மனிதர்கள்', 'ஸ்பைடர் மேன்' 'விலங்குகளின் பள்ளிக்கூடம்' என்ற மூன்று சிறுவர்களுக்கான நாவல் எழுதியுள்ளார். அந்த வரிசையில் இது இவரின் நான்காவது சிறார் நாவல் ஆகும்.உணவில் மிளகாய் காரம் ஏற்படுத்தினாலும்,கதைகளில் பாத்திரங்களாக வரும்போது குழந்தைகளுக்கு பிடித்தமானதாக மாறுகிறது. மிளகாய் பட்டணத்தில் வரும் கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற பாத்திரங்களுடன் வேற்றுக்கிரகவாசிகள் வருகை புரிவது இக்கதையை குழந்தைகளுக்குப் பிடித்தமானதாக மாற்றிவிடுகின்றது. நிலா எப்போதும் குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் வான் பொருள் என்பதால், நிலவின் இரகசியங்கள்அறிய ஆவல்படுகின்றார்கள். அந்த வகையில் மிளகாய்பட்டணம்' குழந்தைகளின் கற்பனைகளுக்கு நல்ல தீனி. மேலும், குழந்தைகளின் அறிவியல்ஆர்வத்தினை தூண்டும் என்பது நிச்சயம்.
Be the first to rate this book.