மரணம் என்பது ஒன்றுமில்லை
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
மரணம் என்பது ஒன்றுமில்லை
நான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வது
அவ்வளவு தான்
நான் ஒரு கல்லறை தாவரத்தின் வேர்களை தரிசிப்பது
நீயதன் தண்டுகளை, பச்சையை, மலர்களை, கனிகளை தரிசிப்பது
உன் கண்கள் மண்ணின் மேல் ஊரும் புழுக்களை அருவருப்பாய் பார்ப்பது
அதே புழுக்கள் என் உடல், ஆன்மாவிற்க்குள் துளைத்துக் கொண்டு நுழைவது
பிடித்த தாவரத்தின் முழு உடலை ஒரு இறந்தவனும், வாழ்பவனும் சேர்ந்து தானே
முழுமையாய் தரிசிக்க முடியும்
மரணம் என்பது ஒன்றுமில்லை
நான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வது
அவ்வளவு தான்
~
5 நிச்சயம் படிக்க வேண்டியது
#மிளகு_பருத்தி_மற்றும்_யானைகள் #நரன் நிர்வாணத்தை எத்தனை பேர் விரும்பி ஏற்பீர்கள் . ஆண்குறியும் பெண்குறியும் உடலின் வியர்வை போல் என எத்தனை பேர் உணர்வீர்கள். கவிதை முழுக்க முழுக்க நிர்வாணம் சார்ந்தது . சிந்தனை நிர்வாணமே கவிதையின் உயிர். இந்த புத்தகமும் அப்படித்தான் . தாயின் நிர்வாணத்தை சிந்தக்க முடியுமா என்றால் முடியும் அவள் உனக்கான உயிர் தந்து அவளின் யோனியை வழியாக்கி உதிரத்தை பாலாய் தந்து வழிவிடுகிறாள் கவிதை புரிதலுக்காகவா அல்லது சிரிக்க வைக்கவா என்றால் எனதளவில் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே சாலச்சிறந்தது தொகுப்பில் மொத்தம் பத்து கவிதைகள் . உள்ளே புதைந்திருப்பது நாம் நாள்தோறும் கேட்டும் பேசியும் பேசாமலும் கடந்து செல்லும் பெருமக்கட் கூட்டத்தின் சிறு தீ என்றே கூறலாம். நாம் வீட்டின் அருகிலே வயதானவர் /இளையவர் ஒருவர் அவர் வீட்டை கடக்கும் தெவ்டியா பையா என்று நம்மை திடிரென்று கடிந்து கொள்வார் . அவர்களின் உலகம் அந்த மூளைக்குள் தோன்றும் எண்ண விருட்சங்கள் , ஒலிகள் உருவங்கள் இவைகளை ஆசிரியர் அளவே விளக்க ஆயிரம் சிந்தனை வேண்டும் உயிரின் தோற்றமென்பது இயற்கையின் ஆகப்பெறும் வரம் . கண்ணுக்கு எட்டா பூச்சியிலிருந்து நாம் காணும் பெரும் உயிர்கள் வரை . ஒரு உயிரை இழந்த தாயின் வலி அதன் தாக்கம் அதன் முடிவிலியென கூரென்பது , வாழ்வென்பது கவிதை பகுதிகள் எட்டாக்கனி எட்டும் கைகளுக்கு எட்டாமல் ஏனோ ஏமாற்றியே பயணிக்கிறதென எண்ண வைக்கிறது . வாழ்வின் ஆகப்பெறும் தத்துவம் மரணமென்பதை மனம் ஏற்க்க மறுக்கிறதென புத்தகம் முழுக்க எண்ண வைக்கிறார். உலகின் முதல் பாவி மதம் கண்டவன் . மதமென்பது அறியாமையை ஏமாற்றும் கற்பழிப்புகாறன். நான் உன்னோடிருக்கிறேன் என கூறி முடித்ததும் அவன் விலாவில் ஈட்டி எய்தி மீண்டும் யாருமில்லை என்பதை உணர்த்தி கொண்டே மதத்திற்கே ஒளி ஏற்றியதை புத்தகத்தின் பல இடங்களில் அமணமாக அமர வைத்துள்ளார். இயற்கை , அரவம் , மதம் , வாழ்வை தொலைத்தவள் , ஆண்குறிகளின் நீளம் , யோனியின் ஆழம் , முலைகளின் இலக்கணம் , மனித இதயத்தின் வஞ்சமென வாசிக்க வாசிக்க வயதின் முதிர்ச்சி எல்லை மீறுகிறது . #அமாசே
magimai xavier 30-08-2020 09:24 am