இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய ஊர்களில் போடப்பட்ட அணுகுண்டுகள் அந்த நாட்டையே சீர்குலைத்துப் போட்டன. அந்நிகழ்வு மனிதன் சக மனிதன் மீது செய்யும் உச்சமான வன்முறையின் அடையாளமாக மாறிப் போனது. போரின் விளைவுகள் எப்படி ஒரு சிறுமியின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை இந்நாவலில் காண்கிறோம். எவ்வளவு மோசமான நிலைக்கு வீழ்ந்தாலும் அகத்தூய்மையும் அழகும் எப்படி அதை வென்று மேலெழும் என்பதையும் இக்கதை நமக்கு உணர்த்துகிறது.
ஜப்பானிய சிறுமி ஒருத்தி சித்திர எழுத்துக் கலையில் கொண்டிருக்கும் ஈடுபாட்டைச் சொல்வதுடன், அது அவளின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை உண்மைகளை எப்படி உணர்த்துகிறது என்பதை கதை விவரிக்கும் விதம் நமக்கு வியப்பைத் தருகிறது. சிறுவர்களும் பெரியவர்களும் தம்மை செம்மை ஆக்கிக்கொள்வதற்கும், சிறந்த மனிதர்களாக வாழ்வதற்கும் இந்தக் கதை தூண்டும் என்று நம்புகிறோம்.
Be the first to rate this book.