மின் ஆராய்ச்சிக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து கொண்ட இணையற்ற விஞ்ஞானியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை.
பணம்,பட்டம்,பதவி, புகழ் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளியவர் மைக்கேல் ஃபாரடே. அவர் விரும்பியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தனது ஆராய்ச்சிகள் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும். அவர் விருப்பம் நூறு சதவிகிதம் நிறைவேறியது என்பதில் சந்தேகமே இல்லை. அவர் கண்டுபிடித்த டைனமோ, ஜெனரேட்டர் இன்னபிற மின்சாரம் உருவாக்கும் சாதனங்கள் தான் இன்றும் உலகின் இயக்கத்தை வேகப் படுத்திக் கொண்டிருக்கின்றன. பெரிய குடும்பம், வறுமையான சூழ்நிலை, பள்ளிப் படிப்பும் அதிகமில்லை. வாழ்க்கையே பெரும் போராட்டம்தான். ஆனால் இவை எதுவுமே ஃபாரடேவின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கவில்லை. லட்சியமும், விடாமுயற்சியுமாகப் போராடி உலகமே வியந்து பாராட்டிய விஞ்ஞானியின் வெற்றிக்கதை.
- இலந்தை சு. இராமசாமி
Be the first to rate this book.