கதாநாயக பிம்பங்களின் மேல்தான் எப்போதும் மொத்த வெளிச்சமும் விழுகிறது. திரைப்படத்தில் கலையார்வத்தோடு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய பல்லாயிரம் கலைஞர்கள் பற்றிய முறையான ஆவணத் தொகுப்பு ஏதுமில்லை. அதுவும் நகைச்சுவை நடிப்பினால் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கலைஞர்களைத் தமிழ்ச் சமூகம் மறந்துவரும் நிலையில், நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் பற்றிய பல்வேறு தரவுகளைத் தேடியெடுத்துத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். 1936 தொடங்கி, 1950 வரைக்கும் 66 படங்களில் நடித்தவர் காளி என்.ரத்தினம். அவரின் அபூர்வமான படங்களையும் சேர்த்திருப்பது சிறப்புக்குரியது.
Be the first to rate this book.