தமிழர்களுக்கு ஆயிரமாயிரமாண்டு கலை, பண்பாட்டு மரபுகளின் வரலாறு இருந்தாலும். அனைத்து கலைகளையும் அதன் வரலாற்று பிம்பங்களோடு மீட்டெடுத்துக் கொடுத்த பெருமைக்குறிய கலை ஒன்று உண்டென்றால் அது எழுபது என்பதுகளுக்கு முந்தைய திரைப்படங்களே எனலாம். தமிழ் திரைப்படங்களில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் பாடல் சண்டைக்காட்சிகள் பெரும்பாலும் மேற்கத்திய நவீனபானி அசைவுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அல்லது சீன ஜப்பானிய வகை தற்காப்புக் கலைகளின் திரிபுகளாகவும் வெளிபடுகிறது. இந்நிலையில்தான் நாம் தமிழ் திரைப்படங்களை திரும்பிப் பார்க்கிறோம். குறிப்பாக எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் சண்டைக்காட்சிகள் தனித்துவமானது. தமிழர்களின் போர்க்கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகளுடன் தனித்துவான அதுசார்ந்த வரலாற்று மீட்புகளைப்போல அவர் எவ்வாறு தனது திரைப்படங்களில் பயன்படுத்தியுள்ளார் என்பதை இந்நூல் மிகச்சிறப்பாக ஆராய்ந்துள்ளது.
தனது லாக்கப் நாவல் மூலம் தமிழ் வாசகப் பரப்பில் நன்கு அறிமுகமானவரான மு.சந்திரகுமார், அடிப்படையிலேயே வாள்வீச்சு, குங்பூ மற்றும் கராத்தே போன்ற தற்காப்புக் கலை பயிற்சியாளராகவும் இருப்பதால் ஒவ்வொரு பக்கத்திலும், நாம் பார்த்து ரசித்த திரைப்படங்களில், நமக்குத் தெரியாத ஆச்சரியத்தை அறிமுகம் செய்துகொண்டேபோவது நமக்கு வியப்பான அரிய தகவலாகும்.
Be the first to rate this book.