வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன் கொழிக்கும்’
என்கிறது காவிரியின் புகழ் பாடும் பட்டினப்பாலைப் பாடல். ஆனால் மத்திய அரசு காவிரிப் பாசன நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்க முயல்வதை விரிவாக விளக்கும் நூல் இது. தமிழக மக்களின் சுய உரிமையும், இயற்கை வளங்கள் மீதான இறையாண்மையும் பாதுகாக்கப்படவேண்டுமென்பதில் நூலாசிரியருக்கு இருக்கும் அக்கறை பாராட்டப்படவேண்டியதும் தமிழர்களாகிய நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதுமாகும். ஏற்கனவே தமிழக ஆறுகள் கணக்கில்லாமல் மணல் அள்ளப்பட்டு சூறையாடப்படுகின்றன. தாது மணல் கொள்ளை, கூடங்குளம் அணு மின் நிலையம்,கடற்கரைகள் ஆக்கிரமிப்பு, நியூட்ரினோ திட்டம் என தமிழகம் அடுக்கடுக் கான சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களால் சூழப்பட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.