ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் அனைவரிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காண முடிகிறது என்றே நினைக்கிறேன். இவர்கள் அனைவருமே தான் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளைக் காட்சிப்படுத்துகிறார்கள்.
மேலும் இவர்கள் அனைவருமே கட்டுப்பாடில்லாத கனவு காண்பவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக இவர்களது கனவுகளின் மையம் என்பது கலை என்பதன் வழியே மனித அறத்தினை நிலைபெற வைக்கக்கூடியதாகவே இயங்குகிறது. அன்பையும், அறத்தினையும் தங்கள் காட்சிகளின் பேசுபொருளாகக் கையாளுகிறார்கள். மேலும் திரைக்கதையினை அமைப்பதில் துவங்கி அப்படைப்பினை உலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது வரையிலும் படைப்புத் தன்மையின் மீது தீவிரப் பற்று கொண்டவர்களாகவும் தெரிகிறார்கள். எனது தலைமுறைக்கு மிகவும் அவசியமான ஒன்று இது.
Be the first to rate this book.