கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான் பகுத்தறிவுத்ம தத்துவங்களுக்கும் அரிச்சுவடி.
தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில் தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தபடும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்டமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம்.
ஆச்சரியம். விநோதம். அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காகக் சில துளிகள்.
தொழில்நுட்ப ரீதியாகவும் அறிவியல் ரீதியாக-வும் நாம் பல்வேறு முன்னேற்றங்களை எட்டியிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி மெசபடோமியா. நாடோடியாக அலைந்து திரிந்த மனிதர்கள் நிலைத்து நின்று நாகரிகத்தை வளர்த்தது மெசபடோமியாவில்தான். ஆகவே இது ஒரு பிரதேசம் மட்டுமல்ல. மனிதகுலத்தின் அடையாளமும் முகவரியும்கூட. நதிகளில் இருந்து நீரை எடுத்து விவசாயம் செய்திருக்கிறார்கள். வியக்க வைக்கும் வீடுகள். நீளமான, அகலமாக தெருக்கள். தெருக்கள் சந்திக்கும் இடங்களில் கோயில்கள். களிமண்ணில் தகவல்கள் பதிவு செய்யும் முறை. அழகான, பெரிய நூலகங்கள். மெசபடோமிய முன்னோர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. மெசபடோமிய நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி மூன்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
Be the first to rate this book.