ந. முத்துசாமியின் மனம் தேர்ந்த நாடகக் கலைஞருடைய மனம்; முதிர்ந்த நாட்டியக் கலைஞரின் மனம். சிறுகதையானாலும் நாடகமானாலும் அவர் படைப்புகளில் வெளிப்படுவது இந்த மனம்தான். பொருள்களின், காட்சிகளின், மனத்தின் இயக்கம்தான் அவருடைய படைப்புகளின் ஊற்றுக்கண். மரபின் செழுமையும், மண்ணின் மணமும், மையமற்ற வாழ்க்கையின் ‘நவீன’மும்தான் அவருடைய அக்கறைகள். பின்நவீனத்துவம், நேர்கோட்டை மீறிய உரைநடை போன்ற கருத்துகள் தமிழில் அறிமுகமாகாத காலத்திலேயே, வெறும் மோஸ்தராக இல்லாமல், அவற்றின் சாரத்தை அனுபவமாக வெளிப்படுத்திய தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையானவர் முத்துசாமி. இந்தத் தொகுப்பில் பத்து புதிய கதைகளும் ‘நீர்மை’ தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகளும் இருக்கின்றன.
Be the first to rate this book.