• கெடைகாடு, ஆங்காரம் விருது நாவல்களைத் தொடர்ந்து எழுத்தாளர் ஏக்நாத் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பிலுள்ள கதைகள் ஆனந்த விகடன், தினகரன் பொன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை..
இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். இவர் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும். இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல் அது. அவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே சிறியதோர் அகராதி தொகுக்கலாம். சில படைப்பாளிகள் சொற்களை, மிரட்டும் தத்துவக் கருவிகளாகவும், கோட்பாட்டுக் குத்துவாள்களாகவும் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இயல்பான சொற்களில், கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார் ஏக்நாத்..
- நாஞ்சில் நாடன் (அணிந்துரையில்..)
Be the first to rate this book.