நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள்,தொழில் அதிபர்கள்,பங்கு மார்க்கெட் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல், அரசியல்வாதிகளிலும் நல்ல நினைவாற்றல் உள்ளவர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. வார்த்தையை மறப்பவர்கள்,எண்களை மறப்பவர்கள்,பெயரை மறப்பவர்கள்,பாடத்தை மறப்பவர்கள் என எத்தனையோ பேர் தங்களின் நினைவு சக்தியைப் பெருக்கிக்கொள்ள போராடுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு,வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இந்த நூல். ஆங்கில வார்த்தைகளின் ‘எழுத்து’ முதற்கொண்டு நாம் பார்க்கும் வண்ணங்கள் வரை அனைத்தையும் நினைவில் இருத்துவது எப்படி என்பதையும், தகுந்த நேரத்தில் அதையெல்லாம் நினைவில் கொண்டுவந்து சமயோசிதமாகச் செயல்படுவது எப்படி என்பதையும், எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுத் தருகிறார் நூலாசிரியர் லதானந்த். நினைவாற்றல் மிக்கவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுவது உண்மை. அந்த வகையில், நினைவாற்றல் உத்தியைக் கற்றவர்கள் மந்திரம் கற்றவர்களைப்போல எங்கும் எப்போதும் அறிவுச் செழுமையுடன் உலா வரலாம்; நடமாடும் பல்கலைக்கழகமாகச் சுற்றி வரலாம்; விழா மேடைகளில் கலக்கலாம்; புள்ளி விவரங்களை அள்ளிவிடலாம்;க்விஸ் நிகழ்ச்சிகளில் வெற்றி பெறலாம்; போட்டித் தேர்வில் வெல்லலாம்.உங்களின் சாதனைக்குத் தக்க பலமாக விளங்கும் மந்திர நூல் இது.
Be the first to rate this book.