கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள். உலகமயமாக்கல் கொணரும் விளைவுகளைச் சலிக்காமல் தமதாக்கிக் கொள்ளும் கதாமாந்தர்களின் அகவோட்டங்கள் முதல் நவீன தொழில்நுட்ப யுகத்தின் புறக்கூறுகள் வரை வானவில்லின் வண்ணங்களாக கருவிலும் வடிவிலும் வசீகரமாய்ப் பூசிக் கொண்டிருக்கின்றன மாதங்கியின் இந்தக் கதைகள்.
- ஜெயந்தி சங்கர்
Be the first to rate this book.