அதிசயங்களைத் தேடும் கண்களும். அன்றாட வாழ்க்கையிலிருந்து 'விடுபட முடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனப் பயணத்தின்போது சசிகுமாருக்கு உடலெல்லாம் கண்கள் முளைத்திருப்பது போலத் தோன்றுகிறது. அத்தனை அழகாக எழுதியிருக்கிறார். வில்லியம் சரோயன் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் ”ஆர்மீனியர்கள் ஒருபோதும் வாய் விட்டு சிரிப்பதில்லை. மறுக்கப்பட்ட நீதியின் வலி அவர்களின் தாடைகளை ஒடுக்கி வைத்திருக்கின்றது” என்று எழுதியிருந்தேன். அர்மீனியாவிற்குப் பயணம் செய்து நேரில் அதை உணர்ந்துஅர்மீனியர்கள் சிரிப்பை மறக்கவில்லை . மறுத்திருகிறார்கள்” என்று சசிகுமார் எழுதியிருக்கிறார். பயணம் தந்த பாடம் என்பது இதுவே.
- எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.