நமது காலத்தின் வெய்யிலுக்கும் நியான் ஒளிக்கும் வித்தியாசமில்லை. நமது கருவுக்கு உறவு வேண்டியதில்லை. குரோமசோம்கள் போதும். நமது நிலா கணினித் திரையில் மிதக்கிறது. நமது அதி உன்னத காதல் கவிதைகள் 100 லைக்குகள் வாங்கி மற்க்கப்பட்டு விடுகின்றன. நமது வாள்கள் பைனரி மொழியில் செய்யப்படுகின்றன. இங்கு காதலர்கள் காதலிகள் எப்போது அன்ஃப்ரண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரியாது. ஆறுகள் கட்டங்களாகி விட்டன. வாய்க்கால்கள் புறவழிச் சாலைகளாகி விட்டன. பசிய மரங்களில் விவசாயிகளின் உடல்கள் கனிந்து தொங்குகின்றன. உணவுத் தட்டுகளைத் தொலைத்து பாக்கெட் பிரித்து உண்ணப் பழகி விட்டோம். நம் காத்தின் வாழ்வென்பது என்ன? அதன் பொருளென்பது என்ன? எல்லாம் மெய்ந்நிகர் கனவு.
Be the first to rate this book.