விளிம்பு நிலைக் குடும்பக் குழந்தைகளின் வாழ்க்கை எத்தகையதாக உள்ளது? அவர்களின் எதிர்காலம் குறித்து நம்அக்கறை எப்படிப்பட்டது? அந்தக் குழந்தைகளின் பார்வையில் நம் நாடு, சமூகம், வளர்ச்சி எல்லாம் எப்படித் தெரிகின்றன? அதில் நம் பங்கையும், நம் முன்னேற்றத்தையும் அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள்? இச்சமூகம், நம் நாடு, இதற்கு என்ன வழி காண்பிக்கிறது?... இது எப்படி இருப்பினும், பள்ளிக் கல்வியும் பொதுக்கல்விமுறையும்தான் இந்தியக் குடும்பங்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம். இருபத்தோராம் நூற்றாண்டின் இந்தியா (மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும்) ஏழ்மையை ஒழித்து வளர்ச்சி அடைவதும் இன்றியமையாதது. இன்றைய உலகில் அனைவருக்கும் கல்வியே எந்த ஒரு நாட்டின் நவீனத்துவத்தையும் எடை போடும் அளவையாக குறிப்பிட வேண்டியிருக்கிறது.
Be the first to rate this book.