கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே.பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும்.
கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல்.
ஊரில் வெள்ளம் வந்தபோது பள்ளிவாசல் காஸியார் போடும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வெள்ளம் வடிவது, பைத்தியக்காரி உம்மாச்சோம் நகைகளைக் கழற்றிப் போட்டு கிணற்றில் குதிப்பது, அஸிஸ் அதிகாரி பல்லக்கில் பயணம் செய்வது, ஆலி முஸ்லியார் குதிரை மீது சவாரி செய்வது எனத் தனித்தனியான அத்தியாயங்களாகக் கதைகள் போகின்றன. தனித்தனி கதை மாந்தர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறுவதாக இந்நாவல் அமைந்துள்ளது.
ஒரு நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு அதே காலத்தில் வெளியான கதைப் புத்தகங்களை வாசித்தால் போதும் என சுல்தான் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கது.
இவருடைய படைப்புகள் கதையா? கட்டுரையா? என்று யூகிக்க முடியாத ஒன்று. மிகச் சிறிய அத்தியாயங்களாகப் பிரித்து ரத்தினச் சுருக்கமாக சொல்ல வந்ததைக் கூர்மையாகச் சொல்லியிருக்கிறார் பாறக்கடவு. இதைப் படித்தால்தான் தெரியும் மற்ற கதைகளுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் இருப்பது.
Be the first to rate this book.