புராணங்களின் பெண் கதாபாத்திரங்களைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள், காலங்காலமாக பெண்களுகானது என ஆண்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனத்தை அடிமைத் தளைகளை அதிர்வுக்குள்ளாக்கும் விதத்தில் புனைவுற்றுள்ளன. புராணங்களின் நாயகர்கள் உருவாக்கிய வன்செயல்களிலிருந்து மீண்டு, சுயத்துடன் நிற்க பெண்கள் பட்டபாடுகளை ஓல்கா பரிதவிப்புடன் கூடிய கலை ஓர்மையுடன் இக்கதைகளில் சித்தரிக்கிறார். கௌரி மிகையற்ற மொழியில் தமிழ்ப்படுத்தியுள்ளார். தமிழ்ப் பெண்ணிய வெளியில் இக்கதைகள் வரவேற்கப் படுவதுடன், நீண்ட விவாதங்களை உருவாக்க வேண்டியுள்ளது.
Be the first to rate this book.