சின்னதும் பெரியதுமான பல கட்டுரைகள் பல திசைகளை காட்டுவனவாய், பல நேரத்தில் எனக்குள் ஊற்றெடுக்கும் மொழியின் வடிகாலாய் அவை அமைந்திருக்கின்றன. காலம், எவ்வளவு தூரம் இன்னும் என்னை நடத்திக் கூட்டிப் போகும் என்று தெரியவில்லை. என் எழுத்துக்களின் உள்ளே இருப்பது அந்தந்த நேரத்து, ஒளிவுமறைவற்ற நானேதான்.
எழுத்தின் மீதி இப்படியொரு பவித்திரம் எப்படி வந்ததென்று யோசித்தால், என்னை உருவாக்கிய எழுத்துக்களின் மனசின் உண்மையைத்தான்
சொல்ல வேண்டும். எழுத்தின் ஒவ்வொரு சுழிப்பும். வரலாற்றின் சுழற்சியை, அந்த நேரத்து மனப் பகிர்வாய், எனக்கு புரிந்த மொழியில் எழுதிப் பார்த்திருப்பதால், அதன் மேல் அப்படியொரு அறவாசம் கவிந்திருக்கக்கூடும்
வாக்குச் சுத்தம் மனசை எடைபோடுவதுதான். அது காற்றிலே கரைந்து போகக்கூடியது. எழுத்துச் சுத்தம் மனசால் எடைபோடுவது.
ஆனால் காலத்தைக் கரைக்கக் கூடியது. ஆகவே, என் மனசைக் கடத்துகிற எல்லாவற்றையும் பதிவு செய்யப் பார்த்திருக்கிறேன் இங்கு!
நிஜநாடக இயக்கம் பற்றியும் நான் தான் எழுத வேண்டும். குறிப்புக்கள் வீட்டிற்குள் கொட்டிக் கிடக்கின்றன. வீட்டின் கடைதிறப்பிற்காய்க் காத்துக்கிடக்கிறேன். காலம் வழி காட்டுமென்று நம்புகிறேன்.
இதில் 14 கட்டுரைகள் உள்ளன. என் எழுத்துக்களின் கால வரிசைக் கிரமத்தைச் சுட்டுவனவாக இக்கட்டுரைகளின் வரிசைக் கிரமங்கள் அமையவில்லை. அவற்றின் பொருள் தொடர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே அவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன
Be the first to rate this book.