ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.
ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்கிற இவனது வரிகளில் என் கண்ணீரும் படிந்து இன்னமும் காயங்களின் வலியை அதிகப்படுத்திவிடக் கூடாதே என்ற கவனத்தோடு எழுதுகிறேன் .
இவனது துயர்கள் இனி இதற்கு மேல் ஒன்றும் நேராது மகனே எழுந்து வா என்று கைகொடுக்க வைக்கிறது. சாவைச் சுமந்தவனுக்கு இழப்பின் வேதனையை அறிந்தவனுக்கு கதை, கவிதை, பாட்டு, சினிமா எதுவானாலும் வெறிகொண்டு வேட்டையாடும் திறனை இவனுக்குள் விதைத்திருக்கிறது.
- வித்யாஷங்கர்
Be the first to rate this book.