கடவுளிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். நோயற்ற சுகமான வாழ்க்கை. செல்வம். அறிவு. பிற வசதி வாய்ப்புகள். சரி, கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? பொன்? பொருள்? ஆயிரம் ஆண்டு காலத் தவம்? கிடையாது.
நம்பிக்கை. அது போதும். கடவுளிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைக்கவேண்டும். மீரா கண்ணனிடம் தன்னை ஒப்படைத்ததைப் போல.
ஆத்மார்த்தமான பக்தி. கண்ணனையே நினைத்து, கண்ணனையே துதித்து, கண்ணனையே பாடி, கண்ணனையே நாடி, அவனையே தன் மூச்சாக சுவாசித்தவள். உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் கண்ணனுக்கே அர்ப்பணித்த பக்தை.
பெற்றோர்களின் கோபம், ஊராரின் கேலிப் பேச்சுகள் எதையும் பொருட்படுத்தாமல் ஓர் ஆன்மிக தேவதையாக வலம் வந்தவர் மீரா. ஆயிரம் கோடி பக்தர்கள் தோன்றிய இந்தப் புண்ணிய தேசத்தில் பக்த மீரா மட்டும் தொடர்ந்து கொண்டாடப்படுவது இதனால்தான்.
Be the first to rate this book.