குழந்தைகள் மிக அழகாகக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கதைக் கருவை இவ்வளவு நுட்பமாக பின்னி எழுதியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
வாழ்க்கையெனும் பெருங்கடல் விசித்திரமானது. எப்போது தாலாட்டும். எப்போது பாடல் பாடும். எப்போது இசைக் கோர்வையாய் மாறும். எப்போது ஆழிப்பேரலையாக மாறுமென்று சொல்ல முடியாது. அதே போலத்தான் கலையும். இதோ நெய்தல் திணையிலிருந்து ஒரு புத்தம் புதிய காற்று வீசுகிறது. பதினாறு குழந்தைகள் நெய்தல் நிலத்தின் மக்களைப் பற்றிக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். பன்னிரெண்டு வயதிலிருந்து பதினாறு வயதுக் குழந்தைகள் எழுதியுள்ள கதைகளை வாசிக்கும் நம்முடைய சமூகம் கவனிக்காத, அக்கறைப்படாத, அலட்சியமாய் கடந்து போகிற அந்த மக்களின் பாடுகளைப் பற்றிய பெருஞ்சுமை நம் மீது கவிந்து விடுகிறது.
Be the first to rate this book.