கதை கேட்கும்போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதை உலகத்தில் கதைசொல்பவருடனே பிரயாணம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது.
கதாபாத்திரங்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது பாவனையான நெருக்கடிக்கு கதைகேட்பவரும் ஆளாகிறார். அந்த நெருக்கடியிலிருந்து கதாபாத்திரம் மீள்வதற்கான சாத்தியங்களை தானும் யோசிக்கிறார். அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பாவனையான திறன் வளர்கிறது. அந்த நெருக்கடிகளிலிருந்து கதாபாத்திரங்கள் மீளும்போது கதாபாத்திரங்களுக்கு ஏற்படுவதைப் போலவே மகிழ்ச்சியும் விடுதலையுணர்வும் கதைகேட்பவருக்கும் ஏற்படுகிறது. இதனால் யதார்த்தவாழ்வில் குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளின்போது திகைப்பு ஏற்படுவது இல்லை. அதிர்ச்சி அடைவதில்லை. என்ன செய்யப்போகிறோமோ என்ற பதைபதைப்பு உண்டாவதில்லை. மன அழுத்தத்தில் சிக்குவதில்லை. அதற்குப் பதில் கதைகளைக் கேட்டபோது பாவனையாக ஏற்பட்ட உணர்வு நிலைகள் இப்போது மனதை ஆறுதல்படுத்துகின்றன. இப்போது எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடிகளுக்கான தீர்வை நிதானமாக யோசிக்கவைக்கின்றன.
Be the first to rate this book.