"நவீன வாழ்வானது சிக்கலான மனோபாவ அழுத்தங்களின் மேல் மிக சொகுசாக்கப்பட்டிருக்கிறது. அது எப்போதும் சுருக்கிட்ட ஒரு கவணை வீசியபடி இருக்கிறது. அதன் இயக்கமும், சுண்டி விடுபட வைக்கும் தகவும் மர்மமானதாகக் கருதப்பட்டாலும் ஒரு கவிஞன் அத்தகைய ஒன்றைக் கண்டடைந்துவிடுகிறான். அதுதான் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் ”காலம்”.
ராஜேஷ் வைரபாண்டியன் தனது கவிதைகளின் வழியாகத் தொடர்ந்து இத்தகைய ஊசலாட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் உறைய வைக்க முயல்கிறார். அத்தகைய அகாலம் இவரின் கவிதைகளின் ஊடாக நகர்ந்து கொண்டிருப்பதே மற்றுமொரு அசைவாகக்காட்சிப்படுகிறது. இப்படி நிகழ்வுகளைத் தாண்டி அவற்றின் மைய நரம்பைப் பிடிப்பது அவ்வளவு எளிதானது இல்லை."
- சாகிப்கிரான்
Be the first to rate this book.