ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொகுத்து விவாதிக்கிறது இந்த நூல். விருப்பு வெறுப்பில்லாத வாதம். தமிழகத் தில் அரசியலாக்கப்பட்டுள்ள ஒரு கருத்தை அறிவியல் பூர்வமாக அணுகுகிறது. இந்திய வர லாற்றை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் இன்றைய சமூக, அரசியல் களங்களில் அறிவியல் அடிப்படை இல்லாமல் குறுகிய மனப்பான்மையோடு பேசப்படும் கருத்துகளைப் புரிந்து கொள்ள உதவும் இந்த நூல் வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய நூல்.
Be the first to rate this book.