என் கதைமாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக் கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். புத்தெழுச்சியும் நுண்மொழியும் இக்கதைமாந்தர்களின் அகப்புலன்களாகி, வாழ்வின் போதாமையை புலன் கடந்து வெல்லப் பார்க்கின்றனர். ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின் இது என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
Be the first to rate this book.