மற்றவர்களாலும் போலி மனசாட்சியாலும் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்ட நிலையில் மனிதர்களின் இருத்தல் எந்த அளவுக்கு அர்த்தமற்றுப்போய்விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் சார்த்ரின் இந்த நாடகம், மனிதனின் நிலையில் காணப்படும் அவலத்தைக் காட்டும் ஒரு துன்பியல் நாடகமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆங்காங்கே மிளிரும் ஒருவிதக் குரூரமான நகைச்சுவையுடனும் அபாரமான மனத் தெளிவுடனும் சார்த்ர், மனசாட்சியைத் தட்டி எழுப்புகிறார். மிகவும் சர்ச்சைக்குள்ளானதும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுமான ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்’ என்ற வாக்கியம் இந்த நாடகத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது.
Be the first to rate this book.