மருத்துவக் காப்பீடு என்பது ஒரு சாமானியனின் மருத்துவமனைச் செலவுகளை ஈடுகட்டுகிற ஓர் அற்புதமான திட்டம். பாலிசிதாரர்களுக்குப் போதிய பாதுகாப்பை அளிக்கும் மருத்துவக் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்கிற ஆவல் எல்லோருக்கும் உண்டு. ஆனால், சரியான வழிநடத்துதல் இல்லாமல் பலரும் இந்தத் திட்டத்தில் சேராமலேயே இருந்துவிடுகிறார்கள். அல்லது, தவறாக வழிகாட்டப்பட்டுப் பணத்தை இழக்கிறார்கள்.
அடிப்படையில் மருத்துவக் காப்பீடு தொடர்பாக நம்மிடையே உள்ள கேள்விகள் என்னென்ன?
நான் ஏன் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேரவேண்டும்?
காப்பீடு திட்டம் அளிக்கும் சலுகைகள் என்ன?
மருத்துவக் காப்பீட்டில் உள்ள சிக்கல்கள் என்ன?
இழப்பீடு கோருவதற்கான வழிமுறைகள் என்ன?
மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பற்றி முழுமையாக அலசும் இந்நூல், பல கேஸ் ஹிஸ்டரிகளை முன்வைத்து, நம்முடைய பல சந்தேகங்களைத் தீர்க்கிறது.
நூலாசிரியர் ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி, காப்பீட்டுத் துறையில் 40 ஆண்டு அனுபவம் பெற்றவர். எல்.ஐ.சி.யின் முன்னாள் சேர்மன் மற்றும் காப்பீட்டுத் தீர்வாணையர். மருத்துவக் காப்பீடு பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார்.
Be the first to rate this book.