மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத கலை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும் விழாவில் நம்மைத் திடீரெனப் பேச அழைக்கிறார்கள். பிறந்தநாள் போன்ற விழாக்களில் பாடச் சொல்லிவிடுகிறார்கள். ஐந்து பேர் கொண்ட பார்ட்டிகளில் கூட பேசச் சொல்கிறார்கள். விளைவு... கை, கால்கள் உதறி, வாய் குழறி, வியர்த்து வெடவெடத்து... தப்பித்தால் போதுமென ஒடி வந்து... பின் இது குறித்து நாமே வெட்கப்பட்டுக் கொள்வது இன்றைய நடப்பு. இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்குமாக எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
* மன ரீதியாக உங்களைத் துணிவுடன் பேசத் தயார் செய்வது...
* உடல் அசைவுகளைச் சரிசெய்கின்ற விதங்கள்...
* சொற்பொழிவுகளைத் தயார் செய்வது...
* குரல் வளத்தைச் சரிசெய்து கொள்வது...
* பேச்சைக் கவனிப்பவர்களைக் கவனிப்பது...
எனப் பல உத்திகளைக் கொண்ட நூல்.
Be the first to rate this book.