குழந்தைகள் தாங்களாகவே வளரவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தேவையானபோது சிந்திக்கவும், சமயோஜிதமாக யோசித்து முடிவெடுக்கவும் போதிய கால அவகாசம் அவசியம். வளர்ந்த மனிதர்களின் மொத்த அறிவும் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையிடம் எதிர்பார்ப்பது, விதையை நட்ட மறுநாளே கலர் கலராய்ப் பூப்பூக்கும், அதுவும் ஒரே செடியில், என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்.
வே.சங்கர் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் சிறார் இலக்கியம் சார்ந்து பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது படைப்புகளில் “எட்டாம் வகுப்பு ‘சி’ பிரிவு” “கானகத்தில் ஒரு கச்சேரி” மற்றும் “டுட்டுடூ” ஆகிய சிறார் நூல்கள் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவரது கவிதைத் தொகுப்பு “அறுபது வயது அதிரூபன்” அமேசான் கிண்டிலில் இ.புத்தகமாக வந்துள்ளது.
Be the first to rate this book.