ஈழத்துக் கவிதைக் குரல்களில் வேறுபட்ட குரல் அலறியுடையது. இந்தக் குரலில் மொழிதலின் நீர்மை துலங்குகிறது. இயற்கை, இருப்பு, யுத்தம், காதல் ஆகியவை அலறியின் முதன்மையான பேசு பொருட்கள். இவற்றிலெல்லாம் நீர்நிலைகளின் அனுபவங்கள் இடம்பெறுகின்றன. நீரின் குணங்கள் உள்ளோட்டமாக படர்ந்திருக்கின்றன. அலறியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு மனித மனத்தின் ஈரத்தையும் ஈரமின்மையையும் பேசுகின்றன.
Be the first to rate this book.