‘சலவான்‘ நாவலால் அறியப்பட்டிருக்கும் பாண்டியக்கண்ணனின் இரண்டாவது நாவலான “மழைப்பாறை” பல கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. குறவர் என்றால் பொதுவான புரிதல் நரிக்குறவர்களைப் பற்றியதாகவே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 28 வகைக் குறவர்கள் உள்ளனர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தங்களது வாழிடத்தையும், தங்களது வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்த குறவர்கள் வனப்பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிக்குப் பெயர்ந்து பல்வேறு தொழில்களால் தங்களது பிழைப்பைத் தேடிக் கொண்டிருக்க, அவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பரம்பரை அடையாளம், தீண்டாமை, சாதிய இழிவு உள்ளிட்டவற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளின் ஓர் ஆவேசத் தீற்றலாக வந்திருக்கிறது “மழைப்பாறை” என்று கொள்ள முடியும். நாவல் முன்னும் பின்னுமாக காலக் கணக்கைப் புரட்டிப் போட்டபடி கதையை மொழிகிறது.
- எஸ். வி. வேணுகோபாலன்
Be the first to rate this book.