மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
Be the first to rate this book.