இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் படிப்பவர் மனதில் ஒருவகைக் கலக்கத்தையும், வெறுமையையும் ஏற்படுத்துபனவாகவும் அமைந்துள்ளன எனலாம். காரணம், போர்ச் சூழலின் கொடூரங்கள், இழப்புகள், இரத்தச் சகதிகள், வாழ்விழந்து தவிக்கும் சாதாரண மக்களின் துடிப்பு என்பன, இந்த உலக வாழ்வு எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியோடும் வாழ்வதற்கு முட்டுக்கட்டை போட்டு, பரஸ்பரப் புரிந்துணர்வு இல்லாமல், வன்மம் கொண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் வீணாகக் கொன்று குவிப்பது எவ்வளவு அவலமானது, முட்டாள்தனமானது என்ற கேள்வியை இக்கதைகள் நம் மனதுக்குள் தோற்றுவிக்கின்றன. இக்கதைகள், இழப்பின் வேதனையும் காயத்தின் வலியும் எல்லோருக்கும் பொதுவானதே என்ற புரிதலைக் கட்டியெழுப்ப முனைகின்றன. இனியும் இப்படியான ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம் என்ற மன்றாட்டக் குரலையும், இந்நாட்டில் எல்லா மக்களும் சமத்துவமாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழலைக் கட்டியெழுப்புவது அனைத்துத் தரப்பினரினது கடமை என்ற உணர்வெழுச்சியையும் அக்கதைகள் தமக்குள்பொதித்து வைத்திருப்பது போன்று உணர்வதைத் தவிர்க்கவே முடியவில்லை.
- லறீனா அப்துல் ஹக்
Be the first to rate this book.