இத்தொகுப்பில் உள்ள எனது கவிதைகள் 1960களின் நடுப்பகுதியிலிருந்து 1980களின் முற்பகுதிவரை ஈழத்தில் நிலவிய முற்போக்குக் கவிதை மரபின் நுஃமான் பாணியை பிரதிபலிப்பவை. முற்றிலும் அரசியல் சார்ந்தவை. அன்று நிலவிய, இன்றும் நிலவுகின்ற தமிழகக் கவிதைப் போக்கிலிருந்து பெரிதும் வேறுபட்டவை. இந்தக் கண்ணோட்டத்தில் இன்றைய வாசகர்கள் இந்தக் கவிதைகளைப் படித்துப்பார்க்கலாம்.
மழைநாட்கள் வரும் ஒரு குறியீடுதான். வறட்சி மிகுந்த கோடை போய் வாழ்க்கையில் வளம் கொழிக்கும் மாரிவரும், வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. 60, 70களில் இந்த எதிர்பார்ப்பு எங்களிடம் வலுலாக இருந்தது. ஆனால், வந்ததோ குருதி நாட்கள்தான். முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக வடிந்த குருதி.
இன்று தமிழகக் கவிதை நேரடியான அரசியலிலிருந்து பெரிதும் ஒதுங்கியிருக்கிறது. அது கவிதைக்கு ஆரோக்கியமல்ல என்றே நான் நினைக்கிறேன். ஈழத்துக் கவிதைக்கு அரசியலை விட்டால் வேறு ஒதுங்கிடம் இல்லை. அது அரசியலிலேயே பெரிதும் உயிர் வாழ்கிறது. அதன் ஆரோக்கியத்தின் ரகசியமும் அதுதான். அதன் பவவீனமும் அதுதான்.
– எம். ஏ. நுஃமான்
Be the first to rate this book.