‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்’ (2000), ‘நீர் மிதக்கும் கண்கள்’ (2005), ‘வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்’ (2012) ஆகிய நான்கு நூல்களின் கவிதைகளும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது. ‘சில ஆரம்பகாலக் கவிதைகள் சுயானுபவத்தை அப்படியே கவித்துவ மொழியில் பதிவாக்கி இருப்பவையாகவும் தற்காலக் கவிதைகள் பலவும் அனுபவத்தின் நிழல்களைத் தவறவிடாது அவற்றைப் ‘பொதுவாக்கி’ எழுதியிருப்பவையாகவும் தோன்றுகின்றன. இந்தப் பொதுவாக்கலில்தான் வெவ்வேறு விஷயங்கள் கவிதைக்குள் வந்துசேரும். இங்குதான் வாசகன் தன் கவிதையை வாசிக்கத் தொடங்குகிறான். அப்பட்டமான சுயத்தின் உணர்வுவயப்பட்ட பதிவாக இருக்கிற கவிதைகளைவிட அதை நுட்பமாகப் பொதுவாக்கியிருக்கிற கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன’ என்கிறார் கவிஞர் இசை.
Be the first to rate this book.