'மே நாள்' இலட்சியத்தின் முதல் வெற்றிச் சின்னமாகப் பாட்டாளி உரிமை காக்கும் சமதர்மக்குடியரசு ஆட்சி முறை அமைந்த நாடாகச் 'சோவியத்து ஒன்றியம்' இன்று ஒளிர்கிறது. அதைத் தொடர்ந்து வேறு பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 'மாவோ' வடிவுதந்த செஞ்சீனமும், புதியதோர் உலகு காணும் முயற்சியில் வெற்றி நடை போடுகின்றன.
அப்படிப்பட்ட இலட்சிய வெற்றிக்கு வழி செய்த திருநாளே, தொழிலாளரின் 'மே நாள்' ஆகும்
அந்த உணர்வை உளங்கொண்டு போற்றிப் பரவச் செய்திடும் பணியை முதன் முதல் தமிழ் நாட்டில் தொடங்கிய பெருமை-பகுத்தறிவு இயக்கத் தந்தை பெரியாருக்கே உரியதாம். தொழிற்சங்க அமைப்பும், இயக்கமும் இந்தியாவிலேயே முதன் முதலாகச் சென்னை மாநகரில் வடிவு கொள்ள வழிகண்டு, தொடர்ந்து பாடுபட்ட பெருமை தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களைச் சாரும்.
பாட்டாளி இன உரிமை உணர்வை, முதன் முதல் கவிதை வடிவில் தந்து புதியதோர் உலகம் காணும் புரட்சி - ஆர்வத்தை வளர்த்த பெருமைக்குரியவர் திராவிடர் இயக்கப் பாவேந்தர் புரட்சிக் கவிஞர் அவர்களே!
Be the first to rate this book.