சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வின் தொடர்ச்சியாக உலகெங்கிலுமுள்ள உழைப்பாளி மக்கள் 1889 முதல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக பின்பற்றி வரத் தொடங்கியதை நாம் நன்கறிவோம்.
ஆயின் முன்னரே மே தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் இருந்து வந்ததையும் அது காலப்போக்கில் கண்டங்களைக் கடந்து எத்தகைய மாற்றத்திற்குள்லாகியது என்பதையும் புரட்சியின் காலம், மூலதனத்தின் காலம், பேரரசின் காலம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல்களை அளித்த பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் எரிக் ஹாப்ஸ்பாம் இச்சிறு பிரசுரத்தில் விவரிக்கிறார். பிரிட்டனின் டிரிப்யூன் பத்திரிகையில் 2019ல் இக்கட்டுரை வெளியானது.
Be the first to rate this book.