எட்டு மணிநேர வேலை கோரி சிகாகோ நகர வீதிகளில் செங்கொடி ஏந்திப் போராடிய தினமான மே 1 வரலாற்றின் பக்கங்களில் தொழிலாளர் தினமாகப் பதிவாயிற்று. இதன் பின்னணியில் சிகாகோ நகரத்து முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல், ஹேமார்கேட் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றும்யாலும் போர்க்குணத்தாலும், அதை எதிர்கொண்டவிதம், போலீஸின் ஈவு இரக்கமற்ற அடக்குமுறை, தொழிலாளர்களின் உயிரிழப்பு, கண்ணீர் என வரலாற்றின் நெடிய பக்கங்களில் நீண்டு செல்கிறது. எம்.கே. பாந்தே அவர்களின் முன்னுரையுடன் வில்லியம் அடல்மன் எழுதிய இச்சரிதத்தை அதன் உயிர்த்துடிப்பு சற்றும் குறைந்து விடாமல் ச. சுப்பாராவ் தமிழில் தந்திருக்கிறார். உழைக்கும் வர்க்கமும் வாசகர்களும் வரவேற்று வாசிக்கவேண்டியப் பிரதி.
Be the first to rate this book.