“இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மட்டுமல்ல. அது சமூக விளைவுகளின் காரணியுமாகும்.”
– மார்க்சிம் கார்க்கி
மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கிருக்கிறது. அதனாலையே அவர் பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாக கருதப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டியிருக்கிறது. அப்படிப்பட்ட மார்க்சிம் கார்க்கியின் முத்துக்களான ஐந்து கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை மார்க்சிம் கார்க்கி புகழ் அழியாது நிலைத்திருக்கும்.
Be the first to rate this book.