உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர் என்றால் அலெக்சாண்டர்தான். ஏன்?
அலெக்சாண்டருக்குக் கனவு காணத் தெரிந்து இருந்தது. அந்தக் கனவை நனவாக்க, ஆயிரம் தடைகள் முளைத்தாலும், உலகமே திரண்டு வந்தாலும் எதிர்த்துப் போரிடும் தீரமும் வீரமும் அவரிடம் இருந்தன.
இவை போக, அலெக்சாண்டருக்கு உத்வேகம் அளித்த மாபெரும் சக்தி தன்னம்பிக்கை. தான் கலந்துகொண்ட எந்தவொரு போரிலும் தோல்வியடைந்ததில்லை அவர். யாரிடமும் எதற்கும் பயந்து பின்வாங்கியதில்லை. காரணம் வாளை அல்ல, தன் மூளையை எந்நேரமும் கூர்மையாக, பளபளப்பாக வைத்துக்கொண்டிருக்க முடிந்தது அவரால்.
அலெக்சாண்டரிடம் இருந்து அள்ளிக்கொள்வதற்கு ஏராளமான பொக்கிஷங்கள் இருக்-கின்றன. நீங்கள் தயாரா?
Be the first to rate this book.