முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை. அவற்றை படித்தாலும் பாதகமில்லை, அந்தளவுக்கு தொந்தரவற்றவை. ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.
குறிப்பிட்ட பிரச்னையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக் கூடியவை. இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க ஏலுமோ என வியப்பைத் தருவதாகவோ, இப்படி பார்ப்பதற்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச் செய்பவை.
- முன்னுரையில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
5 நல்ல படைப்பு
மிக எளிமையாக இந்த சமூக பிரச்சினைகளை விவரித்து இருக்கிறார். நல்ல புத்தகத்தை படித்த திருப்தி கிடைத்தது. Commonfolks.in மிக விரைவாக புத்தகத்தை அனுப்பினார்கள். மிக்க நன்றி.
Srinivasan S 24-04-2018 12:15 am