இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார். அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. தமிழ் நாடகக் கலையின் ஆன்மா எந்தவகை மனிதர்களால் உருவானதென்பதையும் நாடகக் கலைஞர்களின் பேதமற்ற உறவும் வாழ்வும் எவ்விதம் செயல்பாடுகளானது, எளிய மனிதர்களுக்குள் உலவிய கலையின் உத்வேகமும் அர்பணிப்பும் எத்தகையது என்பதை இந்த நாட்குறிப்புகள் பேசுகின்றன.
Be the first to rate this book.